விவசாயிகளிடமிருந்தும், பார வண்டி இழுப்பவர்களிடமிருந்தும், மற்றும் ஊழியர் சங்கங்களிலிருந்தும் 1,50,000 கடிதங்கள் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க ஆதரவு கோரி பிரதமர் அலுவலகத்திற்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன

விவசாயிகளிடமிருந்தும், பார வண்டி இழுப்பவர்களிடமிருந்தும், மற்றும் ஊழியர் சங்கங்களிலிருந்தும் 1,50,000 கடிதங்கள் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க ஆதரவு கோரி பிரதமர் அலுவலகத்திற்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆலைக்கு எதிராகப் பொய் பிரசாரம் செய்பவர்களின் ஆதரவுகள் இதனால் தகர்க்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல ஸ்டெர்லைட் ஆலைக்கு.. ஆலையை உடனடியாகத் திறக்க வேண்டுமென்று வேண்டி, 1.5 லட்சம் கடிதங்கள் தூத்துக்குடியில் உள்ள விவசாயிகளின், பார வண்டிக்காரர்களின், ஆலையில் வேலை செய்வோரின் சங்கங்களிலிருந்து வந்துள்ளது.

ஆலை திறக்க வேண்டும் என்கிற மனுவுடன் சேர்த்து இந்த கடிதங்களையும் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி, ஆலையைத் திறப்பதற்கான அனுமதி வழங்குமாறு ஸ்டெர்லைட் சார்பாக பிரதமரிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டுமென்று ஆதரவுக் கரம் நீட்டுபவர்கள் இந்த ஆலை மூடியதால் அவர்களின் வாழ்வாதாரம் எந்த அளவு பாதிப்புக்குள்ளானது என்றும் விவரித்துள்ளனர்.

சுற்றுப்புற பகுதிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த அளவு இந்த ஆலை உதவியதோ அந்த அளவு அங்கு வாழும் மக்களின் தினப்படி வாழ்க்கை இதை மூடியதால் பாதிப்புக்குள்ளானது. தூத்துக்குடியில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களில் வேலை செய்யும் தினக்கூலிகள் மற்றும் சிறு சிறு வேலை செய்பவர்கள் இந்த ஆலை மூடப்பட்டதால் வேலையில்லாமல் முடங்கிப் போனார்கள்.

அதுமட்டுமல்ல உரங்களின் விலைகளும் ஆலையை மூடியதால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மெட்ரிக்டன் கந்தக அமிலத்தின் விலை (H2SO4) 4000 ரூபாயிலிருந்து 9000 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.

தற்போது வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் பணமாக 50 லட்சம் வாங்கிக் கொண்ட ஆர்பாட்டம் செய்த ஆர்வலர்களைப் பார்த்து மனம் வெதும்பி தங்களை இவர்கள் தவறாக வழிநடத்திவிட்டனர் என்று இப்போது ஒத்துக் கொள்கின்றனர்.

இந்த ஆதரவுக் கருத்து கிடைத்த அதே நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்பாளர்களும் தங்களால் முடிந்தவரை உள்ளூர்காரர்களைத் தவறாகக் கையாண்டு ஆலை திரும்ப திறப்பதை எதிர்த்து போராடினார்கள். கிராமத்து மக்கள் யாரெல்லாம் ஆலை திறக்க வேண்டும் என்று கையெழுத்திட்டார்களோ அவர்களிடமே எந்த முகப்புக் கடிதமும் இன்றி கையெழுத்துகளைப் பெற்றுக்கொண்டு, இந்த பெருநிறுவனத்தை அவர்கள் எதிர்க்கிறார்கள் என்றெல்லாம் பொய் பிரசாரங்கள் செய்துள்ளார்கள்.

தற்போது ஆலையைத் திறக்க வேண்டும் என்று 1,50,000 கடிதங்கள் குவிந்திருக்கும் இந்த வேளையில் அரசு அதிகாரிகள் கீழ்கண்ட குறிப்புகளில் கவனம் செலுத்தி அவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

1)எந்த எந்த ஆர்வலர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள்..?

2)அவர்களுக்கு உள்ள அரசியல் தொடர்புகள் என்னென்ன..?

3)ஒரு கிராமவாசி பணமாக 50 லட்சங்களை வாங்கிக் கொண்டு ஒரு ஆர்வலர் இந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளார். ஏன் இதுவரை இது சம்பந்தமாக எந்த விசாரணையும் அவரிடம் நடத்தப்படவில்லை..?

4)எப்படி ஒரு சிலரால் மட்டும் பொய்யான ஒரு பிரசாரத்தைக் கிளப்பிவிட்டு இந்தியாவிலேயே உள்ள மிகப் பெரிய இந்த காப்பர் ஆலையை மூட முடிகிறது..?

5)இப்படித் தொடர்ச்சியாக (domino effect) ஒன்றால் மற்றொன்று என்று ஏற்பட்ட தொடர் ஆலை மூடுவிழாவினால் காப்பரின் விலை கடுமையான ஏற்றம் அடைந்தது. இதுபோல் ஏதும் நடக்க வேண்டும் என்பதுதான் இந்தப் போராட்டத்தின் குறிக்கோளா..?

6)இந்த ஆலை மூடுவிழாவால் விவசாய உரங்களும் கடுமையாக விலை ஏற்றமடைந்தது. ஒருவேளை ஆலையை மூட முயன்றது இந்திய அளவில் பொருளாதார தடுமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுவும் அவர்களின் குறிக்கோளா..?

இப்படி அப்பாவிப் பொது ஜனம் தவறான பிரசாரங்களுக்கு இரையாகிக் கொண்டிருக்க, நாட்டின் பொருளாதாரத்திலும் ஒரு அடி விழுந்திருப்பது மறுக்க முடியாது. ஸ்டெர்லைட் காப்பர் ஆலை சார்பாக வாதாடிய வக்கீல் திரு.ஆர்யமா சுந்தரம், ஊடகங்களுக்கு அளித்த விளக்கத்தில், போராட்டத்தில் கலந்து கொண்ட ஆர்வலர்கள் யாருமே காற்று, நீர் மாசு அடைந்ததற்கான எந்த சான்றுகளையும் கோர்டில் சமர்ப்பிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

நாம் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன் அதற்கான சிரத்தையுடன் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் இப்போது தூத்துக்குடியில் நடந்தது போன்ற ஒரு பெரிய அழிவைச் சந்திக்க நேரிடும்.

இந்த நிகழ்வில் பெரிதும் நஷ்டமடைந்தவர்கள் உள்ளூர்வாசிகளே. ஆலை மூடப்பட்டதால் அவர்களின் தினப்படி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பெருஞ்சுமையை ஏற்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிவிட்டார்கள்.

Disclaimer: The views and opinions expressed in this article are those of the authors and do not necessarily reflect the official policy or position of SatyaVijayi. This article is a Tamil translation of the original article which can be read here.

Comments

comments