ஸ்டெர்லைட் போராட்டக் குழுக்களின் நேர்மை கடைசியில் கீழ்த் தரமான பாலியல் வீடியோவில் போய் முடிந்தது

ஏற்கனவே, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த சிறப்புக் குழு தன்னுடைய அறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடியது என்பது இயற்கை நியதிக்கு எதிரான செயல்பாடு” என்று கூறுகிறது.

இதன் நடுவே இந்த போராட்டத்தை முழு வீச்சில் நடத்திய ஃபாத்திமா பாபு என்கிற 63 வயது முன்னாள் கல்லூரிப் பேராசிரியர், இன்னாள் போராளியும் அவரின் கூட்டாளியான தெர்மல் ராஜா என்பவரும் சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் போராட்டத்தை மேற் கொண்டு எப்படி நடத்துவது என்று தீர்மானிக்கத் தங்கியிருந்தார்கள்.

அப்போது அவர்களின் தவறான நடத்தையை யாரோ சிலர் வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டுவிட்டனர். இதைப் பற்றி முதலில் எந்த அறிக்கையும் விடாமல் அமைதாயாக இருந்த ஃபாத்திமா பாபு, இரண்டு நாட்களுக்கு முன் எங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காகவே இப்படிப்பட்ட பொய்யான வீடியோவை வெளியிட்டனர் என்று கூறிவிட்டு மூடியாவின் மற்ற கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் சென்று விட்டார் அந்த பெண் போராளி.

பலர் கூறுவது அந்த வீடியோவை வெளியிட்டது “மக்கள் அதிகாரம்” என்கிற NGO என்று கூறுகின்றனர். இந்த குழும்மும் ஸ்டெர்லைட் ஆலைத் திறப்பை எதிர்த்தவர்களே. இப்போது இவர்கள் இரு குழுக்களுக்கும் இடையில் ஏற்பட்ட புரச்னை காரணமாக மக்கள் அதிகாரம், ஃபாத்திமா பாபுவின் வீடியோவை வெளியிட்டதாக காற்றில் செய்தி உலவுகிறது.

சமீபத்தில் வெளியான விஜய் ஜோஸஃப் நடித்த சர்கார் படத்தில், தேர்தலில் போட்டியிடும் சமூக ஆர்வலர் பட்டியலில் ஃபாத்திமா பாபுவும் ஒரு காட்சியில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் நடுவே இவரது எழுச்சி மிகுந்த பேச்சால் கவரப்பட்டு பாமர மக்களான தூத்துக்குடி மீனவ சமுதாயம் இவரின் பாலியல் வீடியோவால் மனம் வெதும்பியுள்ளனர். எப்படிப்பட்ட ஒரு தவறைத் தாங்கள் செய்து விட்டோம். இவரைப் போய் நல்லவர் என்று நம்பி இவர் பின் சென்று ஒரு ஆலையை மூடக் காரணமாக இருந்ததற்காக மிகவும் வேதனைப்பட்டனர். பொறுப்புள்ள ஒரு போராட்டமாக ஆரம்பித்த இந்த போராளியின் கதை பாலியல் வீடியோவின் வெளியீட்டிற்குப் பிறகு காமிடியாக மாறி மக்களிடையே விமர்சனங்களுக்கு உள்ளாகி சிரிப்புக்களமாக மாறியது.

அதன் பிறகு அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது சென்னை வீட்டை தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவ சமூகத்தினர் முன்னாள் கவுன்சிலர் கோல்டன் அவர்களின் தலைமையில் முற்றுகையிட்டனர்.

அதோடு.. போராளி ஃபாத்திமா பாபு மிகவும் அதிகாரம் மிகுந்த தூத்துக்குடி சர்ச்சுகளின் சார்பில் இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. கிறிஸ்தவ எவாஞ்ஜலிஸ்ட் மோகன் சி லாசரஸ் இந்த போராட்டத்தின் பின்னணியில் இயங்கி ஸ்டெர்லைட் ஆலை பற்றிய ஒரு பயத்தை மக்கள் மனதில் இனவாத பிரசாரத்தின்மூலம் ஏற்படுத்தினார் என்றும் கூறப்படுகிறது.

ஒன்று மட்டும் தெளிவாகிறது.

தற்போது நாட்டில் கலகத்தை உண்டு பண்ணுவதற்காகவே வெளிநாட்டு ஊடுருவலின் மூலமாக பல திடீர் போராளிகள் நாட்டின் பல திசைகளிலும் உருவாக்கப்படுகிறார்கள். இவர்களின் செல்வாக்காலும் பண பலத்தாலும் அடித்தட்டு ஏழை மக்கள் தூண்டப்பட்டு போராட்டங்களில் ஈடுபட்டுத் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கிறார்கள்.

இவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி குளிர்காயும் கூட்டங்கள் இந்த மீனவ சமுதாயத்துடனே ஊடுருவி நாட்டில் கலகங்களை உண்டு பண்ணி நன்றாக லாபம் கொழிக்கும் ஆலைகளைப் போராட்டம் என்கிற பெயரில் செயல்படவிடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறர்கள். இந்த போராளிகளுக்கு அன்னிய நாடுகள் பண உதவி செய்து உதவுவதாக ஒரு வாதம் உலவுகிறது. ஆலைகளில் உருவாகும் உள்நாட்டுத் தயாரிப்புகளைத் தடுப்பதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும் முயற்சியாகவே இந்த போராளிகளின் செயல்பாடு பார்க்கப்படுகிறது. அதற்கான சாத்தியக் கூறுகள் நிறையவே காணப்படுகிறது.

அதற்கு ஏற்றார் போல் இந்த போராட்டத்தில் இறந்த 13 பேரும் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று உள்ளூர் கிராம மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் தொண்டர் படையே இல்லாத சிறு சிறு இயக்கங்களின் தலைவர்களும் இந்த தூத்துக்குடி மீனவ சமுதாயத்தைத் தூண்டி குளிர் காய்ந்தனர். அவர்களுக்கும் ஃபாத்திமா பாபு குழுவிற்கும் தொடர்பிருக்கலாம் என்கிற சந்தேகமும் இருக்கிறது.

Disclaimer: The views and opinions expressed in this article are those of the authors and do not necessarily reflect the official policy or position of SatyaVijayi.

Comments

comments