ஸ்டெர்லைட் காப்பர் ஆலையின் மூடுவிழாவால் கண்ட பலன் ஹைடிரோகுளோரிக் ஆசிட் விலை ஏறியதும், அதன் பின் விளைவாக உரங்களின் விலையேறியதும் மட்டுமே..!

அர்பன் நக்ஸல்களாலும், மார்க்ஸிஸ்ட் மாவோயிஸ்டுகளாலும், வெளிநாட்டு சதித் திட்டங்களாலும், இவை மூன்றின் கூட்டு சதியாலும் நம் நாட்டு ஸ்டெர்லைட் காப்பர் ஆலையின் காப்பர் தயாரிப்பில் ஒரு ஸ்திரமற்றதன்மையை உருவாக்கி அதன் பின்விளைவுகளான உரம், ஹைடிரோ குளோரிக் ஆசிட் இவைகளின் விலை ஏற்றத்திற்கு இவர்கள் வித்திட்டார்கள்.

இந்த போராட்டம் மிகவும் தீவிரமாகவும், அபரிமிதமான பணப்பட்டுவாடாவைக் கொண்டதாகவும், அந்த பணத்தின் மகிமையால் பாமர மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களை முழு அளவில் போராட வைத்து தங்களுக்குத் தாங்களே அவர்கள் குழி தோண்டிக் கொண்டார்கள்.

இதனால் வேறு வழியில்லாமல் எந்த உருப்படியான நேர் வழியையும் பின்பற்றாமல் தமிழக அரசு ஆலையை அவசரக் கோலத்தில் மூடியது.

இதன் பின் விளைவுகள் என்னென்ன..?

தமிழ்நாட்டில் உள்ள சிறிய மற்றும் நடுநிலையில் இருக்கும் உரத் தொழிற்சாலைகள் மிகவும் பாதிப்புக்குள்ளாயின. காரணம் அவர்களுக்கு குறிப்பிட்ட விலையில் சல்பியூரிக் ஆசிட் (கந்தக அமிலம்) கிடைக்கவில்லை.

ஏனெனில் தூத்துக்குடியின் ஸ்டெர்லைட் ஆலையின் மூலமாகவே ஒட்டு மொத்த தென் மாநில உரத் தொழிற்சாலைகளுக்கு கந்தக அமிலம் இது நாள்வரை தங்கு தடையில்லாமல் சகாய விலையில் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்பட்டதால், வேறு வழியில்லாமல் வடக்கிலிருந்து இதே அமிலத்தை பல மடங்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள். இதனைத் தொடர்ந்து உரங்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதிக விலையில் வாங்க முடியாத சிறிய தொழிற்சாலைகள் அதனை முடும் சங்கடத்தை சந்தித்துள்ளன.

உதாரணத்திற்கு கோயம்பத்தூர் பயோனீர் உரத் தொழிற்சாலை தங்களின் தேவையான 100% சல்பியூரிக் ஆசிடையும் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையிலிருந்து மானிய விலையில் வாங்கிக் கொண்டிருந்தனர். தற்போது இந்த மூடுவிழாவினால் ஆசிட் தட்டுப்பாடு ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்குள்ளானதாக இதன் மேனேஜிங் டைரக்டர் வேதனைப்படுகிறார். அதிக விலை கொடுத்து வாங்கினால் உரத்தின் விலையும் கட்டுக்கடங்காமல் 300% அதிகமாகிப் போகிறது. தரம் குறைந்த மலிவு ஆசிடை உபயோகித்தால் உரத்தின் தரமும் குறைந்துவிடுகிறது. இருதலைக் கொள்ளி எறும்பு போல் கஷ்டப்படுவதாக இவர் கூறுகிறார்.

அதோடு… இந்திய அளவில் காப்பரின் உற்பத்தி 47% குறைந்துள்ளது. இந்தியா காப்பர் உற்பத்தியை பெரும்பாலும் தன் கட்டுக்குள் வைத்திருந்த காரணத்தால் தற்போது 233% காப்பர் இறக்குமதி செய்ய வேண்டிய நிர்பத்ததில் தள்ளப்பட்டது.

இதே போல் காப்பரை இறக்குமதி செய்வதால் நம்முடைய ஃபாரெக்ஸ் ரிஸர்வ் சிதைந்து அதன் மூலம் வியாபரத்தில் பற்றாக்குறை, தேக்கம் ஏற்படுள்ளது.

பெருமளவில் வேலை வாய்ப்பை மக்களுக்கு இழக்கிறார்கள். அதோடு நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு தேக்கத்தை உண்டு பண்ணும் முயற்சியாகிறது இது போன்ற போராட்டங்கள்.

போராட்டத்திற்காக அன்னிய நாட்டினரிடமிருந்து தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்துவது ஒன்றையே குறி வைத்து பணம் பெற்றுக் கொண்டு பல போராளிகள் பாமர, மீனவ, விவசாயக் கூலிகளை தவறாக வழிநடத்துகிறார்கள்.

இவர்களின் உண்மையான உள் நோக்கம் ஆலைகளை மூடுவதன் மூலம் தொடர் நிகழ்வாக இந்திய பொருளாதாரத்தை சிதைத்து வெளிநாட்டவர்களுக்கு ஒரு தப்பான அபிப்பிராயத்தை இந்திய அரசின் மேல் ஏற்படுத்துவதே..!

இதன் அடுத்த கட்டமாக தமிழ்நாட்டிற்கு எந்த திட்டங்களைக் கொண்டு வந்தாலும் அதைத் தடுப்பதன் மூலம் தனிமனித லாபம் அடையலாம் என்பதற்கு இந்தப் போராட்டம் ஒரு முன்னுதாரணமானது.

Disclaimer: The views and opinions expressed in this article are those of the authors and do not necessarily reflect the official policy or position of SatyaVijayi.

Comments

comments