அந்நிய நன்கொடை – சில தீமைகள், சில தீர்வுகள்

PETA போன்ற அந்நிய நாட்டு தொண்டு அமைப்புகள் சர்ச்சைக்கு உண்டாகும் இக்காலகட்டத்தில், நமது இந்திய சட்டத்தின்படி அந்நிய நன்கொடை  பெறுவோருக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டமான FCRA 2010 (Foreign Contribution Regulation Act)  – வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டம் – என்ற சட்டத்தை ஆராய வேண்டி உள்ளது.

FCRA என்றால் என்ன?

2010ஆம் வருடத்துக்கு முன்பு வரை அந்நிய நன்கொடை பெறுவோர், ஒரே ஒரு முறை அதற்கு உரிமம் (license=உரிமம்) பெறுவதே போதுமானதாக இருந்தது. 2010ஆம் வருடத்துக்குப்பின் 5 வருடங்களுக்கு ஒரு முறை உரிமத்தை புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் நன்கொடை அளித்த அந்நிய நாட்டு உபயதாரரின் பெயர், உபயம் அளித்ததன் நோக்கம் மற்றும் செலவுக்கணக்கு ஆகியவை வருடம் தோறும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. அதை தவிர்த்து, FCRA உரிமம் பெற்ற ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனம் உரிமம் பெறாத தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையளிக்க வெளிநாட்டு நிதியை பயன்படுத்துவது  சட்ட விரோதமாக்க பட்டது. மேலும், ஊடகம் மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றுவோர் இச்சட்டத்தின்கீழ் அந்நிய நன்கொடை பெறும் அமைப்புகளினால் ஆதாயம் அடையக்கூடாது.

அதுமட்டுமல்லாது, அந்நிய நன்கொடை  குறிப்பிட்ட சில வழிகளில்தான் உபயோகப்படுத்தவேண்டும் என்றும் கட்டுப்பாடு உள்ளது. அவை – ஆராய்ச்சி, பயிற்சி அளித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மதரீதியான நடவடிக்கைகள், இயற்கை மற்றும் மனிதனால் ஏற்பட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அளித்தல், மறுவாழ்வு ஏற்படுத்தி தருதல் போன்றவை. இதைத் தவிர இத்தொகையை தொண்டு நிறுவனங்கள் தங்கள் பயனுக்கு அசையா சொத்துக்கள் (ரியல் எஸ்டேட்) வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

அமைப்புகளால் சமர்ப்பிக்கப்படும் குறிப்புகளை பொது மக்கள் பரிசீலனைக்கு உள்துறை அமைச்சகத்தின் இணைய தளத்தில் பெற முடியும்.

இச்சட்டமும் அமைப்புகள் சமர்ப்பிக்கும் கணக்குகளை மக்களுக்கு தெரிவிக்கும் விதமான ஏற்பாடும் செய்வித்தது அச்சமயத்தில் உள்துறை அமைச்சராக இருந்த திரு ப.சிதம்பரம் ஆவார். அவரது இவ்விரு நடவடிக்கைகளுமே இக்கட்டுரையின் ஆதாரமாக அமைந்தன. அதற்கு நன்றியுரைக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

சமூக ஆர்வலர்களுக்கு வெளிநாட்டு உதவி

பெற இந்த ஒரு வழி தான் உள்ளதா?

இல்லை. லாப நோக்கம் இல்லாமல் தொழில் நிறுவனங்கள் (non-profit companies) நடத்தலாம். இவை தனியாக மத்திய பெருநிறுவன விவகார அமைச்சகத்தில்(Union Ministry of Corporate Affairs)  25வது பகுதியின் (Section 25) கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு வரும் நன்கொடையின்

விளைவுகள் யாவை?

இத்தொகையை சரியான முறையில் பயன்படுத்தும் பல அமைப்புகள் இருந்தும், சில அமைப்புகள் சிறு பெரும் தவறுகளில் ஈடுபடுகின்றன

இவை சட்டம் இயற்றும் ஜனநாயக வழியை திசை திருப்புதல், இயற்றப்பட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தலையீடுகள்

சட்டங்களும் கொள்கைகளும் இயற்றும் கடமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித்துவ அரசு ஈடுபடும்போது அரசின் அதிகாரத்தை சீர்குலைத்தல்

கல்வி மற்றும் சமூக சேவைகளில் இந்நாட்டின் குடிகளின் பங்கை குறைத்து, இச்சேவைகள் மண்ணின் மைந்தர்களின் கட்டுப்பாட்டின் வெளியே சென்றுவிடுமாறு செய்தல்

சமூக நீதியின் போர்வையிலும், சுற்றுப்புற சூழலை காப்பதின் போர்வையிலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாக அமைவது

வெளிப்படைத்தன்மைக்காக ஏற்படுத்தப்பட்ட இச்சட்டத்தின் நோக்கை குலைக்கும் வகையில் சில அமைப்புகள் தான் FCRA உரிமம் பெற்றுக்கொண்டு, அனுமதியற்ற அமைப்புகளுக்கு நிதியை பட்டுவாடா செய்வதையும் தன்னார்வலர்கள் கண்டுபிடித்து உள்ளனர்

தன்னார்வலர்கள் செய்த ஆய்வில் அந்நிய உதவியாக பெற்ற தொகையில் சுமார் ரூ. 6000 கோடி செலவிடப்படாமல் நிரந்தர வங்கி கணக்குகளில், குவிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் பல நூறு கோடி செலவில் சில அமைப்புகள் நிலமும் கட்டிடங்களும் வாங்கி குவித்திருக்கின்றன.

சட்டம் இயற்றும் முறையிலும் சட்ட சபைகளில் கொண்டு வரப்படும் சட்ட சம்பந்த விவாதங்களில் இவ்வமைப்புகள் தலையிடுவதும் தெரிய வந்துள்ளது. இந்த விளைவுகளை ஏற்படுத்த இத்தகைய அமைப்புக்கள் கையில் எடுத்த ஆயுதம் தான் பொது நல வழக்குகள் – PIL (Public Interest Litigation). நன்கொடையின் ஊக்கத்தில் போடப்பட்ட பொது நல வழக்குகளின் மூலம் என்ன சட்ட மாற்றங்கள் கொண்டு வர பட்டிருக்கின்றன? பட்டியலிட்டால் திடுக்கிடுவீர்!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டம், கர்நாடகத்தில் கம்பாலா எருமை ஓட்ட போட்டியை தடை செய்தது, கேரளத்தில் கோவில்களில் யானைகளை வளர்ப்பதற்கு எதிரான வழக்கு, தமிழக சிறைகளில் கைதிகளை சந்திக்க யார் யார்  வரலாம், வரக்கூடாது என்பதை முறைப்படுத்தும் அரசாங்க அமைப்பான Prison Visit Boardல் தங்களை சேர்க்க வேண்டும் என்ற மனு போட்டுள்ளார்கள். அதாவது, சிறை கைதிகளை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்க்கு இது ஒரு யுக்தி.

FCRA அமைப்புகள் தங்களை தாங்களே வழி நடத்திக்கொள்ள வேண்டும். அவர்களின் செயல்பாட்டில் அரசு கேள்வி கேட்கவே கூடாது என்றும் வழக்கு பதிவாகி உள்ளது. அவ்வழக்கை போட்டவர்கள்  அந்நிய நன்கொடை பெறுவோரே!

ஓரின சேர்க்கையாளர்ளின் பெயரால் 377 சட்டத்தை ஒழிக்க வேண்டி தாக்கல் செய்யப்பட்ட மனுவும் அந்நிய நன்கொடை பெறும் அமைப்புகளாலும் நபர்களாலுமே

குறிப்பு – இவ்வழக்குகளின் நன்மை தீமைகளை நாம் இங்கு ஆராயவில்லை. அவற்றை இந்நாட்டின் மக்கள் தங்கள் பிரச்சனைகளாகப் பார்க்கிறார்களா அல்லது அவை வெளிநாட்டு நன்கொடையாளர்களின் நோக்கம் மட்டுமேயா என்பதே இக்கட்டுரையின் மைய அலசல்.

மத்திய கண்காணிப்பு ஆணையம் (Central Vigilance Commission) என்ற மிகவும் நாசூக்கான ஒரு அரசு அமைப்பின் பணி அமர்வு மற்றும் மாற்றங்களை எதிர்த்து வழக்கு போடப்பட்டுள்ளது. இவ்வழக்கின் பின்னணியிலும் அந்நிய நன்கொடை உள்ளது.

Women’s Power Connect என்ற ஒரு இந்திய அமைப்பில் மிகவும் வலுவான பெண்ணிய சித்தாந்தவாதிகள் உள்ளனர். இவர்களுக்கு அமெரிக்க அரசு இயந்திரத்தின் மிகவும் அடி ஆணி வேராகத் திகழ்ந்த ஹிலாரி கிளிண்டன் ஒரு அரணாக இருக்கிறார். இவர்களின் பரிசீலனையின் பெயரில் பல பெண்ணிய போராட்டங்கள், பெண்ணியம் பேசும் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன

– By @zeneraalstuff

Comments

comments