இந்தியாவில் மதச்சார்பின்மை என்பது ஹிந்துக்களுக்கு பெரும் பாரமாக அமைந்துள்ளதா..?

பகவான் விஷ்ணு கருமை நிறமாக பரிமளிப்பவர். இதனை ஸம்ஸ்கிருதத்தில் ஹரிதாவர்ணம் என்பர். ‘கருமை நிறத்தோனே’ என்பது இதன் பொருள். ஹிந்து மதக் கடவுள்கள் பெரும்பாலும் சில்ப ஸாஸ்த்திரப்படியும், வாஸ்து ஸாஸ்திரப்படியும் கருமை நிறமான கிரானைட் கற்களாலேயே வடிவமைக்கப்படுவது வழக்கம். இதனை பழங்கால கோவில்களில் நாம் காணலாம். விஹ்ணுவின் சகோதரியான பார்வதி தேவியும் கருநிறத்தழகியாகவே விவரிக்கப்படுகிறாள்.

ஆகவே எல்லா விஷ்ணுவின் அவதாரங்களும்.. உதாரணத்திற்கு ஶ்ரீராமரும், ஶ்ரீகிருஷ்ணரும் கருமை நிறம் படைத்தவர்களாக இருப்பதில் எந்த ஆச்சரியம் இல்லை. உண்மையில் பாகவத புராணம் குழந்தை ஶ்ரீகிருஷ்ணரை கருமை நிறத்தில் அவதரித்த ரூப சௌந்தர்யனாக கொண்டாடுகிறது. புராணங்களிலும், இதிகாசங்களிலும் பாரதக் கடவுள்கள் கருமைநிற மேகத்துடனும், ஆழ் கடலின் கரு நிறத்துடனும் ஒப்பிட்டு வர்ணிக்கப்படுகிறார்கள்..!

வெளிநாட்டு ஆக்ரமிப்பாளர்கள் பாரத்த்திற்குள் காலடியெடுத்து வைக்கும் வரை.. கருமை நிறம் மிகவும் ஸ்லாகிக்கப்பட்ட நிறமாக இந்தியாவில் கொண்டாடப்பட்டது.

இன்றுவரை ஶ்ரீராமரும், ராமாயணமும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இஸ்லாயிய பெரும்பான்மை உடைய இந்தோனேஷியா, பௌத்த தேசமான தாய்லாந்து போன்ற நாடுகளிலும் இதே கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. தாய் மன்னர்களின் அரச மாளிகைக்கு ராமரின் பிறந்த இடமான ‘அயோத்தி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல எந்த மன்னர் முடிசூடுகிறாரோ அவருக்கு ராம் என்கிற அரச பெயரோடு முடிசூட்டுகிறார்கள். ராமாயணம் என்னும் ஹிந்து காவியம் இந்தோனேஷியா என்னும் இஸ்லாமிய மக்கள் மிகுந்த நாட்டிலும் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது.

இந்தோனேஷிய மக்கள் மதப்படி இஸ்லாமிய மக்களாகவும், கலாசாரப்படி ஹிந்துவாகவும் வாழ்வதாகக் கூறிக் கொள்கிறார்கள். சர்வதேச கலாசாரத்திற்கும் நாகரீகத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இவர்களின் முக்கியத்துவம் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தைத் தாண்டியும் பரிமளிக்கிறது.

ஆயினும்.. மதச்சார்பற்ற நாடு என்று இந்தியாவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரும் பெரும்பான்மையான இந்தியர்களின் கடவுள்களான ஶ்ரீராமருக்கும், ஶ்ரீகிருஷ்ணருக்கும், ஏன் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பலராலும் கொண்டாடப்படும் ஶ்ரீராமருக்கும் ஶ்ரீகிருஷ்ணருக்கும் கொண்டாடப்படும் பிறந்தநாளுக்கு இன்றுவரை இந்தியாவில் தேசியவிடுமுறை கூட அறிவிக்கப்படவில்லை. இது போன்ற நிலை எந்த தேசத்திலும் நிகழ்ந்திருக்காது.

அப்படியென்றால் மதச்சார்பின்மை என்பது ‘வெள்ளையர்களின் மேலாதிக்க இனவாதம்’. அது இங்கு மாறு வேடத்தில் இருந்து கொண்டிருக்கிறது என்று கூறலாமா..?

இதுதான் மதச்சார்பின்மை என்றால்.. மதச்சார்பின்மை என்பது தெளிவாக மதவெறி என்றும் இனவெறி என்றும் கொள்ளலாம். இந்தியா போன்ற பெரும்பான்மை கரிய தோல்களை உடைய மக்களைக் கொண்ட நாடுகளில், கருப்புத் தோல் இல்லாத மதத் தலைவர்களின் பிறந்த நாட்களை மட்டும் தேசிய விடுமுறை நாளாகக் கொண்டாட வேண்டும் என்பது மேற்கத்திய கலாசாரத்தின் எழுதப்படாத சட்டம். இந்த முறைக்கு ஒரு வாரத்தை உள்ளது மேற்கத்திய கலாசாரத்தில். ஆனால் அது கொஞ்சம் தரக்குறைவான உணர்வுடையது.

இங்கு வெள்ளை நிறத்தவராக இல்லாமல் மாநிறமாக இருப்பவர்களில் சிலர் தங்களை வெள்ளையர்கள் என்று எண்ணிக் கொண்டு, சம்பந்தமே இல்லாத வெளிநாட்டவர்களின் தலைவர்களுடைய பிறந்த நாட்களைக் கொண்டாடிக் கொண்டு, உள்ளூர் தலைவர்களை அவமதிப்பதும் நடந்தேறுகிறது. தன்னை வெள்ளைக்காரனாக பாவித்துக் கொண்டு தான் தன் இன மக்களைவிட உயர்ந்தவர் என்று நினைப்பவர்களுக்கு ‘தேங்காய்’ என்று ஒரு பட்டப் பெயர் உண்டு. தேங்காய் எப்படி வெளியே மாநிறமாக இருந்தாலும் உள்ளுக்குள் வெண்மையாக இருக்குறதோ அது போல இவர்களின் தோல் நிறம் மாநிறமாக இருந்தாலும், உண்மையில் பிறப்பில் இந்தியராக இருந்தாலும் உள்ளுக்குள் தான் வெள்ளைக்காரன் என்னும் எண்ணத்தோடு மற்றவர்களை அவமதித்து மேற்கத்திய இனவெறித்தனத்தை தன் மக்களிடமே பிரயோகிப்பார்கள். இதற்கு “ஸ்டாக்ஹோம் சின்ரம்” என்று ஒரு சொல்வடை உண்டு. தன்னை யார் கடத்தினார்களோ அவர்களின் மேல் அபத்தமான பாசத்தைக் காட்டும் பரிதாப நிலையுடையவர்களை “ஸ்டாக்ஹோம் சின்ரம்” உடையவர்கள் என்று கேலி செய்வது வழக்கம்.

இப்படிப்பட்ட அடிமை எண்ணம் நம் ஊரில் இருக்கும் சிலருக்கு எப்போது மறையும்..? உண்மையில் இவர்கள் எப்போது காலனி ஆதிக்க சிந்தனையிலிருந்து விடுபடுவார்கள்..?

இந்த செயல்பாட்டை நம் மேன்மை தங்கிய உச்சநீதி மன்றம்

ஸூ மோட்டோ வழக்காக எடுத்துக் கொண்டு இப்படிப்பட்டவர்களின் இனவாத எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா..?

Disclaimer: The views and opinions expressed in this article are those of the authors and do not necessarily reflect the official policy or position of SatyaVijayi. This article is a Tamil translation of the original article which can be read here.

Comments

comments