காஃபாவிற்கும் புராதான ஹிந்து மதத்திற்குமான தொடர்பு – ஒரு உண்மைத் தேடல்

2014 க்குப் பின் பிஜேபி மத்தியில் ஆள ஆரம்பித்ததிலிருந்தே ஹிந்து மத எதிர்ப்பாளர்கள், ஹிந்துத்வவாதிகள் இந்திய சரித்திரத்தைச் சேதப்படுத்திக் கொண்டுருப்பதாக திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக விளிம்புநிலை சரித்திர ஆய்வாளர்களின் எழுத்துகளை உதாரணமாகக் காட்டி அதையே ஹிந்துத்வவாதிகளின் எழுத்தாண்மை என்று கூறிவிடுவார்கள்.

இந்த ஹிந்து எதிர்பாளர்கள் மேற்கோள் காட்டுவது அப்படிப்பட்ட விளிம்புநிலை சரித்திர ஆய்வாளரான புருஷோத்தம் நாகேஷ் ஓக் (1917-2007) ஐத்தான். இவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசியபடையில் இருந்தவர்.

திரு.ஓக்கைப் பொறுத்தவரை தாஜ்மஹால் ஒரு சிவன் கோவில், வாடிகன் நகரம் என்பது வேத வாடிகா, கிறிஸ்டியானிடி என்பது கிருஷ்ண வேதம் என்கிற அபத்த வாதங்களை முன்வைத்து இவைதான் ஹிந்துத்வாக்களின் சரித்திர ஆராய்ச்சி என்று ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் சர்ச்சையைக் கிளப்பிவிடுவார்கள்.

ஆனால் திரு.பி.என்.ஓக் அவர்களின் வாதத்தை எந்த ஹிந்துத்வ சரித்திர ஆய்வாளர்களோ, எழுத்தாளர்களோ பெரிதாக நினைத்ததில்லை. உண்மையில் அவர்கள் இப்படிப்பட்டவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மக்களை எச்சரித்தனர்.

நவீன தேசியவாதி என்று அழைக்கப்படும் சரித்திர ஆய்வாளர் சீதாராம் கோயல் அவர்கள் திரு ஓக்கைப் பற்றிக் குறிப்பிடும் போது

‘ஹிந்து பாண்டித்யத்தின் மிகப் பெரிய அழிவு’ அவர் என்றார்.

அதேபோல், டாக்டர்.கோயன்ராட் எல்ஸ்ட் (Dr Koenraad Elst) -இவரை உற்சாகமான ஹிந்துத்வாவை ஆதரிப்பவர் என்று மார்ஸிஸ்ட்களால் பேசப்படும் நபர், இந்திய நாட்டையும் அதன் மக்களையும் பற்றி ஆய்வு செய்த பெல்ஜியத்தைச் சேர்ந்தவர் ஓக் ஒரு கற்பனைக் களஞ்சியத்தின் உச்சக்கட்டம் என்கிறார்.

புது கண்டுபிடிப்புகள் அல்லது சரித்திர பற்றிய விளக்கங்கள் எப்போதாவது மார்க்ஸிஸ்ட் சரித்திர எழுத்தாளர்களின் முக்கிய நிகழ்விற்கு அறைகூவல் விடுவதாக இருந்தால் உடனே அந்தச் சிந்தனையாளரை ஓக்கின் பள்ளியிலிருந்து வந்த சிந்தனை என்று ஒதுக்கிவைத்தனர்.

ஒரு 13 பக்கத்திற்கு திரு.ஓக் அவர்கள் “காஃபா ஹிந்து கோவிலா?” என்னும் கட்டுரையில் இஸ்லாமியர்களின் புனிதத்தலமான ‘காஃபா’ முதன்முதலில் ஹிந்து கடவுளான சிவபெருமானின் கோவிலாக இருந்தது என்று வாதிட்டிருந்தார். ஆனால் இந்த சிவல் கோவில் என்கிற கோரிக்கை ஹிந்துத்வ சரித்திர ஆய்வாளர்களால் ஓக் அவர்களின் பொய் பிரசாரம் என்றும், வினோதமான கூற்று என்றும் கேலி செய்யப்பட்டது.

முதல் பார்வையில் ஒக் அவர்களின் மற்ற போலி வரலாற்றுக் கூறுகள் போல் இதுவும் ஒன்றுதான் என்று தோன்றினாலும், பின்னர் இதில் சில உண்மைகள் இருப்பது கண்கூடாகத் தெரிகிறது.

காஃபாவின் சரித்திரம்:-

இஸ்லாமியர்களின் கருத்துப்படி காஃபா என்பது அவர்களின் முதல் மசூதி, அந்த மசூதியை அல்லாவின் ஆணைப்படி ஆப்ரகாம் கட்டினார் என்பதே. ஆனால் இந்த செய்தியை ஆதரிக்கும் சான்றுகள் எதுவுமே அங்கு இல்லை.

உண்மையில் காஃபா என்பது ஒரு கோவிலே. ஆனால் அது ஹிந்து கடவுளின் கோவில் இல்லை. இஸ்லாம் உருவாவதற்கு முன்னிருந்த அரபு பேகன் என்கிற வழிவகையைச் சார்ந்தது. அதில் இஸ்லாமிய மதம் தோன்றுவதற்கு முன் அரேபியாவில் இருந்த பேகன் கடவுள்களின் விக்ரஹங்கள் பல அங்கிருந்தது. ஆனால் 7 ஆம் நூற்றாண்டு வாக்கில் நபிகள் நாயகம் மொஹம்மது அவர்களின் முஸ்லிம் படைகள் மெக்கா நகரத்தைத் தாக்கி காஃபாவை கைப்பற்றினர். வெற்றி பெற்றதைக் கொண்டாட நபிகள் மெக்காநகரில் நுழைந்த அன்று அந்த காஃபாவைச் சுற்றி 360 சிலைகள் இருந்ததாகக் கூறுகின்றனர். (Sahih Al-Bukhari, Book 59, Hadith 583 குறிப்புகள்)

நபிகள் நாயகம் அந்த சிலைகளை கையில் உள்ள குச்சியால் அடித்துக் கொண்டே “உண்மை வெளிவந்தது; அதனால் பொய் மறைந்துவிட்டது” என்றாராம். (“Truth has come and Falsehood has Vanished.. (Qur’an 17:81)”)

புராதான ஹிந்துக்களுடனான சம்பந்தம்:-

திரு.ஓக் கூறியபடி இல்லாவிட்டாலும், அதாவது காஃபா என்பது ஒரு ஹிந்து கடவுளான சிவபெருமானின் கோவிலாக இல்லாவிட்டாலும், பழமையான இஸ்லாமியர்களுக்கு முன்பிருந்த அரேபிய பேகன்களுக்கும் ஹிந்துக்களுக்கும் பல ஒற்றுமைகள் இருந்தன. இந்த தென் அரேபிய வியாபாரிகளுக்கும், இந்தியர்களுக்கும் வியாபார உறவு இருந்திருந்தது. அதோடு அவர்களின் கடவுள்களில் ஒருவகையான “பால்” என்பது சிவலிங்கத்தை ஒத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நாகரீகம்1 இன் கணக்குப்படி OUR ORIENTAL HERITAGE என்னும் புத்தகத்தில், பக்கம் 309 இல் சரித்திர ஆய்வாளர் வில் டியூரெண்ட் எழுதுகிறார்… “உருளையாக நெட்டுக்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்ட தூணான “பால்” என்பது, ஹிந்துக்களின் சிவலிங்கத்தை ஒத்திருக்கிறது. அதை வணக்கத்திற்குரிய ஆண்மையின் சின்னமாக யூதர்கள் வணங்கி வந்தனர்” என்கிறார்.

இஸ்லாமிய சரித்திர ஆராய்ச்சியாளர் ஃபிரிஷ்டா கூறுகிறார், இந்தியாவில் உள்ள ப்ராமணர்கள் பேகன் கடவுள்களுக்கு வணக்கம் செலுத்துவதற்காக யாத்ரீகர்களாக காஃபாவுக்குச் சென்றிருந்தனர் என்கிறார். அதோடு தன்னுடைய புத்தகமான Tarikh-i-Firishta வில், இஸ்லாம் உருவாவதற்கு முன்னரே இந்தியாவிலிருந்து பிராமணர்கள் காஃபாவிற்கு புனிதப் பயணம் மேற் கொண்டு அங்கிருந்த சிலைகளை வழிபட்டனர் என்கிறார்.

ஆங்கில மொழிபெயர்பான Tarikh-i-Firishta, “History of the rise of Mahomedan power in India, Vol IV, p. 234, லெப்டினெண்ட்.கொலோனல். ஜான்பிரிக்ஸ் – கிழக்கிந்திய கம்பெனியின் ஆபீஸர் மற்றும் சரித்திர ஆய்வாளர் எழுதுகிறார், ஹிந்து யாத்ரீகர்கள் பெரு மதிப்பு வைத்து, மெக்காவிற்கும், எகிப்திற்கும் சென்று அங்கிருந்த சிலைகளுக்கு மிகுந்த அர்பணிப்பு உணர்வுடன் தங்கள் வணக்கத்தையும் மரியாதையையும் செலுத்தினார்கள் என்று..!

மேலும் அவர் கூறியது,  இந்தத் துறையில் மேலும் மேலும் தூண்டித் துருவி ஆராய்ச்சி செய்யும் போது கிழக்கு திசையின் புராதானப்படி பழங்கால சரித்திரத்தில் இந்தியா – எகிப்தியர்களிடையே பல ஒற்றுமைகள், இணைப்புகள் இருந்திருக்கின்றது.

அதாவது… காஃபா என்பது ஹிந்து கோவிலாக இல்லாவிட்டாலும், இதுவரை கண்டுபிடித்ததிலிருந்து, ஆதிகால பாரதீயர்கள் யாரெல்லாம் காஃபாவை இஸ்லாமிய காலங்களுக்கு முன்னர் சென்று நேரில் பார்த்திருக்கிறார்களோ அவர்களுக்கு நன்றாகத் தெரியும் அங்குள்ள உருளையான வடிவம் கொண்ட “பால்” இவர்களின் சிவலிங்கம் போல் இருந்ததென்றும் அதை கடவுளாக அவர்கள் கண்டு உணர்ந்தார்கள் என்பதும் நிதர்ஸனம். ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே திரு.பிரிக்ஸ் அவர்களின் கூற்றுப்படி, பாகன் அரேபியர்களுக்கும் பாரதீயர்களுக்குமான இப்படிப்பட்ட புகழ்பெற்ற கலாசாரத் தொடர்பு இன்னமும் ஒரு திறந்த ஆராய்ச்சியாகவே உள்ளது.

இப்படியாக ஹிந்து எதிர்ப்பு – இஸ்லாமிய ஆதரவு இந்திய சரித்திர ஆய்வாளர்கள் இந்த இணைப்பை எதிர்ப்பதற்காக தங்களால் ஆன எல்லா முயற்சிகளையும் எடுத்தனர். எங்காவது இந்த இரண்டு கலாசாரங்களுக்கும் உள்ள சம்பந்தத்தைப் பேச யாராவது தலைப்பட்டால் அவர்களை முட்டாள்கள் என்றும் ஓக் போன்ற எண்ணமுடையவர்கள் என்றும் அடையாளக் குறியிட்டு அடக்கினர். ஊடகங்களிலும், கல்வித்துறையிலும் இப்படிப்பட்டவர்களே நிறைந்திருந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் புராதான ஹிந்து கலாசாரத்திற்கும், இஸ்லாமியர்களுக்கு முந்தைய அரேபியர்களுக்குமான தொடர்புகளை அறிவது என்பது இயலாத காரியமே..! மேலும் இதனால் கடவுள் சிலைகளை எதிர்த்து உடைக்கும் விரும்பத்தகாத செயல்களைச் செய்பவர்களின் செயல்பாடுகள் விசாரணைக்கு வரும்..!

Disclaimer: The views and opinions expressed in this article are those of the authors and do not necessarily reflect the official policy or position of SatyaVijayi. This article is a Tamil translation of the original article which can be read here.

Comments

comments