ஸ்டெர்லைட் ஆலை திறக்கப் போகிறதா..? பொறுப்பில்லாத, உணர்ச்சி வசப்பட்ட, யாருக்காகவோ தொடை நடுங்கி அந்த ஆலை மூடப்பட்டதா..? தேசிய பசுமைத் தீர்ப்பாயக் குறிப்பு தூய்மைக்கேடு ஆலையால் இல்லை என்கிறது..!

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த சிறப்புக் குழு தன்னுடைய அறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடியது என்பது இயற்கை நியதிக்கு எதிரான செயல்பாடு” என்று கூறுகிறது. இது தனிப்பட்ட ஒரு குழுவை அமைத்து ஆலையினால் ஏற்படும் தூய்மைக்கேட்டை ஆராய்ந்த போது வந்த முடிவின் சாரம். இந்த வருட ஆரம்பத்தின் போது, தமிழக அரசு பல குழுக்களின் தொடர் போராட்டங்களினால் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது குறிப்பிடத்தக்கது. நினைவில் கொள்ள வேண்டியது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஜஸ்டிஸ் ஆதர்ஷ் குமார் கோயல் அவர்களின் தலைமையின் நீதிமன்ற தீர்ப்பில், தமிழ்நாடு அரசும், ஸ்டெர்லைட் காப்பரின் தாய் நிறுவனமான வேதாந்தா குழுமமும் ஒரு வாரத்தில் தங்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

முதலிலிருந்தே, வேதாந்தா குழுமம் தன் நிலைபாடான ஆலை முடியது ஜனநாயகத்திற்குப் புறம்பானது என்று கூறியது. ஆனால் அவர்களின் வாதத்திற்கு மதிப்பளிக்கப்படவில்லை. ஆகஸ்ட் மாதத்தில், வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்பாயத்தில் தமிழ்நாடு அரசின் நிலை பாடான ஆலை மூடுதலை எதிர்த்து வழக்கு தொடுத்தது. அதன் படி சிறப்பு குழு ஒன்று இது விஷயமாக அமைக்கப்பட்டது. அப்போது அந்த பெஞ்ச் கூறியது, இந்த குழு அமைக்கப்பட்டதன் நோக்கமே ஒரு உண்மையான, ஆதாரமான, நம்பத்தகுந்த வழியில் இந்தப் பிரச்னையை அணுக வேண்டும் என்பதே.

ஆலையில் இல்லாத பிரச்னையை இருப்பது போல் நாடகமாடிய போராட்டக்காரர்களின் அராஜகப் போக்கிற்கு அடிபணிந்து மூடிய தமிழக அரசுக்கு இந்த தீர்ப்பு என்பது ஒரு மிகப்பெரிய பின்னடைவுதான்.

ஆலையை மூடியது என்பது தேவையில்லாத காரியம் என்று அறிக்கை வெளியிட்ட தனிநபர் தீர்ப்புக்குப் பின், எல்லோர் மனதிலும் தொக்கி நிற்பது தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் இறந்து போன 13 பேரின் மரணத்திற்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள் என்பதே. தலைவன் இறந்து போன குடும்பத்தின் இன்றைய அவல நிலைக்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்..? தூத்துக்குடி காப்பர் ஆலை மற்றும் ஆலை தொடர்பான பல நிறுவனங்களில் தொடர்புடைய ஆயிரக்கணக்கான மக்கள் இன்று தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்துள்ளனர்.

போராட்டத்தை வழிநடத்திய தலைவர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஊதாரித்தனமாக கேளிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண் போராளியின் தவறான, ஏற்றுக் கொள்ள முடியாத வீடியோ ஒன்று வேறு சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதுதான் போராளிகளின் லட்சணமா..? இதுதான் நியாயமான போராட்டமா..? வதந்திகளைக் கொண்டு நடந்து கொண்டிருக்கும் ஆலையை மூடியது சிலரின் லாபங்களுக்காகவா..?

இந்தப் போராட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் தினக் கூலிகள், உள்ளூர் வியாபாரிகள், மற்றும் அவர்களிடம் வேலை செய்பவர்களே. இந்தத் தீர்ப்பின் பிறகு ஒன்று நன்றாகப் புலப்படுகிறது. ஒரு சிலரின் சுயநலமான சிந்தனையினால் மட்டுமே இந்த போராட்டம் நிகழ்த்தப்பட்டது. அப்பாவியான மக்களைத் தூண்டிவிட்டு அவர்களை உணர்ச்சிவசப்படுத்தி தமிழ் என்றும் தமிழின் பெருமை என்றும் பொய்யான வாதங்களை வைத்து போராட வைத்தார்கள் சில சுயநலமிகள். இது போன்று தொடர்ந்து நடந்தேறினால் தமிழகம் என்கிற மாநிலமே எல்லாவிதமான முன்னேற்றத்திலும் கீழ் நிலையை அடையும்.

ஆலை மூடுவதற்கு ஒரு வருடம் முன்பாக, பிறகு ஆலை மூடிய கடந்த நாட்களில் எப்படி ஒரு சிலரின் சுயநலத்தினால் உள்ளூர் மக்களை தூண்டி ஆலைக்கு எதிராக செயல்படுத்த முடிந்தது என்று மீடியாக்கள் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளன. இப்படி மீடியாக்கள் இன்று கூறுவதனால் மட்டுமே ஸ்டெர்லைட் கம்பெனி எந்தத் தவறும் செய்யவில்லை என்று ஒப்புக் கொண்டதாகிவிடாது. இந்த காப்பர் ஆலையால் உள்ளூர் மக்களுக்கு ஏதேனும் பின் விளைவுகள் ஏற்பட்டுள்ளதா என்பதை தகுந்த குழுக்களை அமைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்மானிக்க வேண்டும். அதற்கான ஆயத்தங்களை மேற் கொள்ள வேண்டும்.

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகிறது. யாரோ மேற்கொண்ட போராட்டங்களாலும் ஆலை மூடியதாலும் தொடர்ந்து அவதிக்குள்ளானது அங்கு இருந்த பொது மக்கள் மட்டுமே..!

Disclaimer: The views and opinions expressed in this article are those of the authors and do not necessarily reflect the official policy or position of SatyaVijayi. This article is a Tamil translation of the original article which can be read here.

Comments

comments