கத்துவ கற்பழிப்பு வழக்கும்… அத்தோடு தொடர்புடைய ISIS மற்றும் நக்ரோடா ராணுவ காம்ப் தாக்குதலும்

தற்போது 10 மாதங்கள் கடந்து விட்டது கத்வாவில் 8 வயதுக் குழந்தைக்கு கொடூரமான மரணம் நிகழ்ந்து..! அந்தக் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்ட சூழ்நிலையால் கொதிப்படைந்த ஒட்டு மொத்த இந்திய மக்களும் அந்தக் குழந்தைக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதி வேண்டும் என்று குரல் எழுப்பினர்.

ஆனால் பொது மக்கள் கிளர்ந்தெழுந்த நேரத்தில் அவர்களின் பின்னே பதுங்கியிருந்த இந்திய எதிர்ப்பாளர்கள், மொத்தப் போராட்டத்தையும் தங்கள் சௌகரியத்திற்கு நகர்த்திஹிந்துக்களை அவதூறு சொல்லவும், பொய்யாக காவித்தீவிரவாதம் என்று தவறான செய்தியைப் பரப்பவும் செய்தார்கள்.

இவை அத்தனையும் ISIS இன் மேற்பார்வையில் நடந்தேறியது.

ஆசிஃபா என்ற அந்தக் குழந்தை இறந்தது ஜனவரி மாதத்தில். ஆனாலும் உண்மையான போராட்டம் ஆரம்பமானது ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில். பிறகு J&K போலீஸ் 7 பேரை அரஸ்ட் செய்ததும் சோஷியல் மீடியாக்களில் ஹிந்துக்களைப் பற்றியும், அரசாங்கத்தைப் பற்றியும் தரம் தாழ்ந்து விமர்சனங்கள் உலவ ஆரம்பித்தது. திடீரென்று 17 ஆம் தேதி ஏப்ரல் மாதம் கேரளாவில் இதே போன்ற போஸ்டர்கள் ISIS ஆதரவாளர்களால் வினியோகிக்கப்பட்டு, மக்களிடையே வகுப்புவாத விரோதம் ஏற்படுத்த முயன்றதாக அந்த மாநில போலீஸ் ரிப்போர்ட் அளித்தார்கள்.

இந்த பிரசுரத்தை டிஸைன் செய்த முகநூல் ஐடி “Aadhil AX” கேரள மாநிலத்தைச் சேர்ந்த IS நபர். அவரின் உண்மைப் பெயர் ஷாஜீர் மங்கலாசேரி அப்துல்லா. இவன் சோஷியல் மீடியாவில் பல பெயர்களில் உலவும், இந்தியாவிற்கு எதிராகச் செயல்படும் ஜிஹாதி. இவனுடைய ஐடியை NIA 2016 ஆம் ஆண்டிலேயே கண்காணித்து, ISIS சம்பந்தப்பட்ட குற்றத் தொடர்பான செய்திகளை தன்னைப் பின் தொடர்பவர்களுக்கு பரப்பிக் கொண்டிருந்ததும் கண்டறியப்பட்டது.

மேலும் “Did you know?” என்ற ஒரு ஐடியை உருவாக்கி அதன் மூலம் ISIS இன் கொள்கைகளைப் பொதுவில் பரப்பி வந்தான். இதில் “Did you know?” என்னும் ஐடி இன்னமும் டிவிட்டரில் இருந்து கொண்டிருக்கிறது. அது ப்ளாக் ஆகவில்லை. அல்லது டிவிட்டர் அதை ப்ளாக் செய்யவில்லை.

இந்த ISIS பிரசாரத்தின் ஆரம்பப் புள்ளி என்பது கேரளத்தில் உள்ளது என்பதில் எந்த ஆச்சரியமும் கிடையாது. அதற்கு ஒரே காரணம் இதுவரை அதை ஆண்டவர்கள் ஒன்று கம்யூனிஸ்ட் அல்லது காங்கிரஸ். இவைகள் இரண்டுமே தேசியத்தைப் பற்றிய எந்த கவலையும்  இல்லாத கட்சிகள். எப்பொழுதெல்லாம் நம் உளவுத்துறை அமைப்புகள் இவர்கள் விஷயத்தில் ஏதேனும் ஆதாரம் தேட தீவிரமாக முயல்கிறதோ அப்போதெல்லாம் உலகளவில் நம் தேசத்தின்

நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி இந்த இரு கட்சிகளாலும் நடக்கிறது.

ஹிந்திப்பட உலகிலிருக்கும் நடிகர்களிலிருந்து இந்திய மீடியா ரிபோர்டர்கள் வரை எத்தனையோ பேர் தாங்கள் எதைப் பரப்புகிறோம் என்பதே புரியாமல் பல விஷயங்களைப் பரப்புகிறார்கள். அவை அத்தனையையும் பல விதங்களில் வடிவமைத்துக் கொடுப்பது ஷாஜீர் மங்கலாசேரி அப்துல்லா. அதோடு மேலும் சில ஆப்புகளான (Apps) டெலிகிராம், ரஷ்யன் சார்ந்த மென்பொருட்கள், போன்றவை வரைமுறைக்கு உட்பட்ட ISIS சானல்களில் மிகவும் பிரபலம். அதோடு இந்த ஷாஜீரின் செயல்பாடான தகவல்கள்அல்லது செய்திகளை கோட் (CODE) களாக மாற்றும் மேம்பட்ட முறையால் வடிவமைத்தவரின் கட்டுப்பாட்டுக் கண்காணிப்பை மீறி அவைகளை உடைப்பது என்பது அரசாங்கத்தைப் பொறுத்தவரை மிகவும் சவாலாக செயலாக இருந்தது.

கத்துவா கற்பழிப்பு விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்களை தேசவிரோத கும்பலும், சமூக விரோதிகளும் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். இப்போதுதான் தெரிகிறது இந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய குஜ்ஜார் ஆர்வலர்தாலிப் ஹுஸைன்தன் உறவினரையே கற்பழிக்க முயன்ற குற்றத்திற்காக தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் என்று. ஒரு JNU மாணவியும் இவர் மீது இது போன்றே குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆனால் இதெல்லாம் வெளிவந்ததே தவிர இவருக்கும் தீவிரவாதிகளுக்கும் உள்ள தொடர்பு சம்பந்தப்பட்ட செய்தி பொதுமக்கள் பார்வைக்கு வரவே இல்லை. இவர் ஒரு தேசவிரோதிகளின், தீவிரவாதிகளின் ஆதரவாளர் என்று இவரின் உறவினரே தற்போது சாட்சியளித்துள்ளார். நாக்ரோடா பேஸ் காம்ப் தகர்ப்பின் முதல் நாள் தாலிப் ஹுஸைனைப் பார்க்க சில ஸ்பெஷல் விருந்தாளிகள் டாடா சுமோவில் இவர் வீடு தேடி வந்திருந்தனர். இவர் தன் மனைவியிடம் அவர்கள் இருக்கும் வரை மூச்சே விடக் கூடாது என்று ஆணையிட்டிருந்தார். அடுத்தநாள் விடியற்காலையில் அதாவது நவம்பர் 29, 2016 இல் அந்த காம்ப் தாக்கப்பட்டு 7 ராணுவ வீரர்கள் மாண்டனர்.

(ஆர்வலர் தாலிப் ஹுஸேனும், கத்துவா கற்பழிப்புப் குற்றத்தின் வழக்கறிஞரும் நக்ரோடா ராணுவ காம்ப் தாக்குதல் செய்யப்பட்ட போது எடுத்த படம்)

கத்துவா கற்பழிப்பு வழக்கிற்கு நடந்த போராட்டங்களும், ஷோபியன் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கிற்கு நடந்த போராட்டங்களும் (2009) பல விதங்களிலும் ஒரே மாதிரி ஒத்து இருந்தது. இவை இரண்டு வழக்கிற்காக நடந்த போராட்டங்களுமே காஷ்மீர் பள்ளத்தாக்கை 6 மாதங்களுக்கும் மேலாக பற்றியெரியும் நிலையில் பதட்டமாகவே அங்குள்ள மக்களை வைத்திருந்தது.

இந்தக் கதைக்குப் பின்புலம் என்னவென்றால்.. 2009 ஆம் ஆண்டு இரண்டு பெண்களின் சடலங்கள் ரம்பியாரா நதியின் கரையில், ஷோபியன் என்னுமிடத்தில் ஒதுங்கியது. ஒரு பெண்ணின் உடல் பாதிக்கு மேல் துணியில்லாமலும், உலர்ந்த மணல்மீது, மூக்கில் ரத்தம் வழிய நெற்றியில் சிந்தூரம் இட்டுக் கொண்டும் இருந்ததாக ஒரு சாட்சி கூறியுள்ளது.

இந்த இரண்டு பெண்களின் இறப்பையும் நிகழ்த்தியது ரத்த வெறிபிடித்த காவித் தீவிரவாதிகளால் என்றும், காஷ்மீரிய இஸ்லாமியர்களை ஒழித்துக்கட்டுவதற்கான நடவடிக்கை என்றும் ஆர்பாட்டங்கள் நடக்க ஆரம்பித்தது. இதன் பின் விளைவாக 8 நபர்கள் இறந்தனர். 400 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பின்னர் இந்த வழக்கு CBI க்கு மாற்றப்பட்டு இறந்த அந்த பெண்களுக்கு AIIMS இல் போஸ்மார்ட்டம் செய்யப்பட்டது. அதன்படி ஒருபெண் கன்னி கழியாதவள் என்றும் மற்றவளுக்கும் இவர்கள் சொல்வதுபோல் எதுவும் நிகழவில்லை என்றும், அதற்கெல்லாம் மேல் 6 சாட்சிகள் இரண்டு பெண்களும் முழு உடையுடன் இருந்ததாகச் சாட்சி கூறியுள்ளனர்.

அது ஷாஜீராக இருந்தாலும், தாலீஃப் ஹுஸேனாக இருந்தாலும், கத்துவா கற்பழிப்பு வழக்காக இருந்தாலும், பழிவாங்கும் கொடூர குணமுடைய தேச விரோத கும்பல்கள் J&K  போராட்டங்கள் அனைத்திலும் பின்புலமாக விளங்குவது தற்போது நன்றாகப் புலப்படுகிறது.

8 வயதுக் குழந்தையான குற்றமற்ற அப்பாவியான ரஸானாவிற்கு கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும். ஆனால் அதே சமயம் இது போன்ற நகழ்வுகளை உருவாக்கி அதன் மூலம் குளிர்காயும் தேச விரோத சக்திகளை நாம் ஒவ்வொருவரும் முறியடிப்பது நம் கடமையாகும்..!

Disclaimer: The views and opinions expressed in this article are those of the authors and do not necessarily reflect the official policy or position of SatyaVijayi. This article is a Tamil translation of the original article which can be read here.

Comments

comments