ஸ்டெர்லைட் காப்பர் ஆலையின் விவசாயிகள் ஆதரவு நடவடிக்கைகள் – ஆனந்தப்பட்ட கிராமத்து மக்களும், கோபப்பட்ட போராளிகளும்..!

கால்வாய் சுத்திகரிப்புத் திட்டம் – இது விவசாயத்திற்கு மிகவும் முக்கியமான திட்டம். ஏனெனில், எங்கெங்கு கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறதோ அதை அடிக்கடி துப்புரவு செய்யும் போது விவசாயத்திற்குத் தேவையான நீர் விவசாயிக்குக் கிடைக்கிறது. பயிர் வளர்ச்சியை பெருக்குவதற்காக இதை எடுத்து நடத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தைச் சார்ந்தது. சில பெருநிறுவனங்களும் இதில் கலந்து கொள்வது வழக்கம்.

பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு நடவடிக்கைதான் CSR activities எனப்படுவது.

ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் தங்கள் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களான உடன்குடி, தொளப்பன் பண்ணை, இடையார் காடு, ஸௌத் ஆத்தூர், ஆறுமுகநேரி, ஆறுமுக மங்கலம், சிவகாளை போன்ற கிராமங்களில் சுமார் 51.5 கிமீ நீளமுள்ள கால்வாய்களைச் சுத்திகரிப்புச் செய்து அதன் மூலம் 11,100 விவசாயிகளும், 11700 ஹெக்டேர் நிலப்பரப்பும் பயனடைந்தது.

திரு.ராஜன் அவர்களின் கூற்றுப்படி (வீடியோ சேர்க்கையில் உள்ளது) ஸ்டெர்லைட் நிறுவனம் மேற்கொண்ட CSR நடவடிக்கைகள் தூத்துக்குடியைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ஒரு வரமாகத் திகழ்ந்திருக்கிறது. தூத்துக்குடி கிராமத்து மக்கள் பலமுறை அரசாங்க அதிகாரிகளுக்கு கால்வாய் சுத்திகரிப்பைப் பற்றி நினைவூட்டிய போதும், அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்துள்ளது. அதுமட்டுமல்ல திரு.ராஜன் இந்த கால்வாய் சுத்திகரிப்பின் மூலம் 1500 ஏக்கர் நிலம் பயனடையும் என்றும், பல படித்த கிராமத்து இளைஞர்களுக்கு ஆலை திறப்பால் வேலை வாய்ப்பு பெருகும் என்றும் கூறுகிறார்.

இதில் கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால், ஸ்டெர்லைட் ஆலையின் CSR (channel cleaning project) நடவடிக்கைகள் சுற்றியுள்ள விவசாயிகளால் பாராட்டப்பட்ட போதிலும், சமூக ஆர்வலர் ஃபாத்திமா பாபுவிற்கு அதை சகித்துக் கொள்ளும் பக்குவம் இல்லை. பள்ளிகளுக்கும், நிறுவனங்களுக்கும், விவசாயிகளுக்கும் ஸ்டெர்லைட் ஆலை செய்த உபகாரத்தை தவறு என்று கூறியுள்ளார் ஆர்வலர் ஃபாத்திமா பாபு. அது மட்டுமல்லாது மாவட்ட கலெக்டரிடம் ஸ்டெர்லைட் ஆலையின் CSR (channel cleaning project) நடவடிக்கைகளைப் பற்றி புகாரும் அளித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையின் CSR (channel cleaning project) நடவடிக்கையினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை உண்டாகும் என்றும் எச்சரித்துள்ளார்..!

திரு.சிந்தா – தாமிரபரணி விவசாயிகள் சங்கத் தலைவர் மேலும் சில அங்கிருக்கும் கிராமத்து விவசாயிகளுடன் இணைந்து ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளார். தாமிரபரணி ஆற்றைச் சுற்றியுள்ள விவசாய இடங்களுக்கும், கிராம மக்களுக்கும் ஸ்டெர்லைட் ஆலையின் CSR (channel cleaning project) நடவடிக்கைகள் மிகவும் உதவிகரமாக உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையின் CSR தடவடிக்கைகளின் மேல் சுற்றுச்சூழல் ஆய்வாளர் ஃபாத்திமா பாபுவுக்கு எதிர்மறையான நிலைபாடு உள்ளது. அதோடு அதனால் தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை உருவாகும் என்ற அவரின் புகாரை அங்குள்ள விவசாயியான சிந்தா  வெகுவாக விமர்சித்துள்ளார். அப்படிப்பட்ட ஆர்வலர்களின் வங்கிக் கணக்குகளை அரசாங்கம் சரிபார்த்து வாராவாரம் அலுப்பில்லாமல் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்குச் சென்று புகார் மனு கொடுப்பதன் உண்மையான காரணத்தைக் கண்டு பிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இப்படிப்பட்ட தவறான பிரசாரத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு, ஆலையை எதிர்ப்பவர்கள்  ஆலையின் அருகாமையில் உள்ள மீனவ சமூகம் மட்டுமே. மற்றபடி அங்குள்ள மக்கள் அனைவருமே ஆலை திறக்க வேண்டும் என்றுதான் குரல் கொடுக்கிறார்கள்.

இந்த ஒரு நிகழ்வின் மறுபக்கத்தை நோக்கும் போது கீழ்கண்ட கேள்விகள் நம் மனதில் கேட்கத் தோன்றுகிறது…

1)எதற்காக ஒரு சுற்றுச்சூழல் ஆய்வாளர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையை எதிர்த்து புகாரளிக்கிறார்..?

2)ஒரு பெருதிறுவனமே இந்த சுற்றுச் சூழலில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தாலும் அதனால் ஆதாயமடையப் போவது கிராம மக்களும் விவசாயிகளும்தானே..? எதற்காக மாவட்ட ஆட்சியாளரிடம் வாரம் தப்பாமல் புகார் அளிக்கப் போகிறார் இந்த ஆர்வலர்..?

3)இந்த சுற்றுச்சூழல் ஆய்வாளர் தன்னுடைய வழக்கமான பாதையை மாற்றிக் கொண்டுவிட்டாரா அல்லது இந்த நல்ல நிகழ்வை எதிர்ப்பதற்கு அவருக்கு ஸ்டெர்லைட் ஆலையின் மேல் இருக்கும் குருட்டுத்தனமான வெறுப்பு மட்டுமே காரணமா..?

ஒருவேளை ஸ்டெர்லைட் ஆலையின் CSR நடவடிக்கைகள் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு பெருந் தொல்லையாக இருக்கிறதோ..? ஆனால் இதே நடவடிக்கைகள் விவசாயிகளுக்கும் பெரும்பாலான மக்களுக்கும் சாதகமாக இருக்கிறதே..?

Disclaimer: The views and opinions expressed in this article are those of the authors and do not necessarily reflect the official policy or position of SatyaVijayi. This article is a Tamil translation of the original article which can be read here.

Comments

comments