கிராமவாசிகளின் கூற்றுப்படி, ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிரான போராடத்திற்காக செலவிடப்பட்ட பணம் 50 லட்சங்கள்..!

கீழ்காணும் வீடியோவில் ஒரு கிராமவாசி சொல்லியிருப்பது தூத்துக்குடி மாவட்டத்தில் 10,000 குடும்பங்களுக்கும் மேற்பட்டவர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அதோடு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடும் ஆர்வலர் மகேஷ் என்பவருக்கு 50 லட்சங்கள் கொடுக்கப்பட்டதாகவும், அதில் 22 லட்சத்திற்கு அவர் வீடும், 4.5 லட்சத்திற்கு காரும் வாங்கி அதை தன் தொழிலுக்குப் பயன்படுத்தி வருகிறார் என்றும் கூறுகிறார். பின்னர் அதே கிராமவாசி, தன்னுடைய பேச்சின் இறுதியில் ஸ்டெர்லைட் ஆலையை கண்டிப்பாக திறந்தேயாக வேண்டும் என்கிறார்.

இங்கே குறிப்பிடப்படும் ஆர்வலர் ஏ.மகேஷ் –  பட்டப்படிப்பு படித்தவர். தான் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் முழு மூச்சாகக் கலந்து கொண்டு, கும்மாரெட்டியார்புரம் கிராமவாசிகளைத் தொடர் போராட்டத்திற்கு வழி நடத்த தலைமை தாங்கியவர். இந்த போராட்டம் ஆரம்பித்த நாள் பிப்ரவரி 12 ஆம் தேதி 2018. தூத்துக்குடியில் அமைதியின்மையை ஏற்படுத்தியதற்காக அவர் மீது 5 முதல் தகவல் அறிக்கைகள்  (FIRs) பதிக்கப்பட்டுள்ளது.

எப்போது 3 நபர் கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தில் நுழைந்ததோ அப்போதிலிருந்தே அந்த இடத்தில் பீதியைக் கிளப்பக் கூடிய தவறான, அதே சமயம் மிக அதிகப்படியான நடவடிக்கைகளும் ஆரம்பித்துவிட்டது. அங்கு நடக்கும் ஒவ்வொரு சுற்றுச் சூழல் நடவடிக்கைகளிலும் தேவையில்லாத கருங்காலிகளின் ஆட்டமும் ஆரம்பித்துவிட்டது.

கீழே உள்ள இந்தப்படம் குறிப்பிடுவது அல்லது பிரதிபலிப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உள்ளூர் மக்களிடம் கையெழுத்து வாங்க உபயோகிக்கப்படுத்த  வேண்டிய முறையான கடித நகல். அதாவது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள படங்களின் மூலம் தெரிந்து கொள்வது என்னவென்றால் ஏற்கனவே பிரிண்ட் செய்யப்பட்ட காகிதத்தில்தான் உள்ளூர் மக்களிடம் கையெழுத்து வாங்க வேண்டும்.

இந்தப் படத்திலிருந்து ஒருவர் நன்றாகத் தெரிந்து கொள்வது.. கையெழுத்துப் படிவங்களுடன் எந்தவிதமான முகப்புக் கடிதமும் இணைக்கப்படவில்லை. வாய் வார்த்தைகளின் மூலமாக அங்குள்ள மக்கள் ஒரு பெரிய நிறுவனத்திற்கு எதிராக அவர்களின் கையெழுத்துகளை ஒரு வெத்துக் கடுதாசியில் போடுகிறார்கள். அது மட்டுமல்ல அந்தப் படத்திலிருந்து மூன்று மூன்று பேர்களாகக் கூடி பொதுமக்களிடம் கையெழுத்து வேட்டையை நடத்துகிறார்கள்.

ஒரு மதத்தின் வழிபாட்டு இடம் ஸ்டெர்லைட்  நிறுவனத்துக்கு எதிராக பிரசாரம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. அதோடு அந்த வீடியோவிலிருந்து, அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள், எப்படி ஒரு போராட்டத்தை நடத்தும் நபருக்கு 50 லட்சங்கள் கொடுக்கப்பட்டது என்பதைத்  தங்களுக்குள் பேசுவதையும் கவனிக்கலாம். இதன் மூலம் நம்மால் கீழ்கண்ட இந்த கேள்விகளை எழுப்ப முடிகிறது.

1) கையெழுத்துப் படிவங்களுடன் ஏன் எந்தவிதமான முகப்புக் கடிதமும் இணைக்கப்படவில்லை..?

2) 3 பேருக்கு மேல் உள்ள ஒரு கூட்டமே ஊர் மக்களை இந்த கையெழுத்துக்கு அணுகியதால் ஏன் ஒருவேளை அந்த நகரத்து மக்களை பயமுறுத்தி அவர்களின் கையெழுத்துக்களை இவர்கள் பெற்றிருக்கக் கூடாது..?

3) தூத்துக்குடி ஒரு சிறிய நகரமாக இருப்பதனால் அங்குள்ள மக்கள், தாங்கள்  சமூகத்தால் புறக்கணிக்கப்படப் போகிறோமே என்கிற பயத்தாலேயே ஏன் அந்த படிவங்களில் கையெழுத்திட்டிருக்கக் கூடாது..?

4) ஒரு மதத்தின் வழிபாட்டி இடம் எதனால் ஒரு நிறுவனத்துக்கு எதிராக பிரசாரம் செய்ய பயன்படுத்தப்படுகிறது..?

5) அங்குள்ள கிராமத்தவர்கள் சொல்வது போல்.. இந்த போராளிகளுக்கு அவர்களின் போராட்டத்திற்காக பணம் வழங்கப் பட்டிருப்பது உண்மையானால்.. கையெழுத்து வேட்டைக்காகவும் ஏன் பணம் வழங்கப்பட்டுருக்கக் கூடாது..?

6) ஏன் தமிழ்நாடு அரசாங்கம் இந்த போராளிகளின் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்து எதனால் இவர்கள் பாகுபட்டிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கக் கூடாது..?

நாட்டின் வளர்ச்சியைப் பற்றி பேச ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒவ்வொருவரும் மேற்கொண்ட கேள்விகளை எழுப்பிய பின்னரே அதைப் பற்றி பேச ஆரம்பிக்க வேண்டும். ஒருவேளை, மதத்தாலோ, சமூகப் புறக்கணிப்பாலோ, அல்லது தவறான தகவலாலோ ஒரு குறிப்பிட்ட பெறு நிறுவனத்திற்கு எதிராக செய்தி கிளப்பப்பட்டால்.. நாட்டின் வளர்ச்சியைக் குறைக்கும் பலப் பரீட்சைக்கு இந்தியா பூத சாட்சியாகி ஒரு தவறான வழிகாட்டலுக்கு முன்னுதாரணமாகிவிடும்.

அதே போல இப்படிப்பட்ட போராளிகளை தீவிரமாகக் கண்காணிக்கத் தவறானால்.. இந்த அன்னியக் கைக் கூலிகளின் தூண்டுதலினால் பெரிய நிறுவனங்களின் மூடுவிழாக்கள் நடந்தேறும்.

Disclaimer: The views and opinions expressed in this article are those of the authors and do not necessarily reflect the official policy or position of SatyaVijayi. This article is a Tamil translation of the original article which can be read here.

Comments

comments