ஆதரவளிக்கும் கிராமத்து மக்களும் அவர்களை பயமுறுத்தும் பொய்ப் போராளிகளும்..!

தூத்துக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்டெர்லைட்காப்பர் தொழிற்சாலையை ஆதரிக்கத் தயாராக இருக்கும்போதும் இவர்கள் சமூக ஆர்வலர்களால்தாக்கப்படுகிறார்கள்..!

ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை இந்தியாவின்தேவையான காப்பரில் 40% உற்பத்தி செய்தது. இந்தஉருக்காலையை, விரிவுபடுத்தும் எண்ணத்தில் இந்தியத்தேவைக்கான 60 – 70% உற்பத்திக்கான திட்டங்களைமேற்கொள்ள ஏற்பாடுகள் செய்த நேரத்தில்தான்தொடர்ந்து பல போராட்டங்களை சில போராளிகளால்சந்திக்கும் சங்கடத்தை தொழிற்சாலை எதிர் கொண்டது.

இதன் புன் நடந்த போராட்டம் அனைவரும் அறிந்ததே..!

23 செப்டம்பர் 2018 அன்று 3 நபர்கள் அடங்கிய NGT panel -தேசிய பசுமை தீர்ப்பாயம் தொழிற்சாலையினைமேற்பார்வையிட்டு அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டுநடைபெறுகிறதா, காப்பர் தயாரிப்புக்கான தகுதியுடன்அனைத்தும் அமைக்கப்பட்டுள்ளதா என்பதைஆராய்ந்தனர். அதனைத் தொடர்ந்து, தொழிற்சாலைதிறப்பதை ஆதரிக்கும் ஊழியர்களை சந்திக்கவும் செய்து,பின்னர் தொழிற்சாலைக்கு அருகில் இருக்கும் கிராமத்துஜனங்களை சந்தித்தார்கள்.

இந்த சந்திப்பிற்குப் பிறகு பசுமைத் தீர்ப்பாயத்தின்தலைவர், பெரும்பாலான மனுதாரர்கள் ஸ்டெர்லைட்தொழிற்சாலை துவங்குவதற்கு எதிர்ப்புதெரிவித்துள்ளதாக அறிவித்தார்.

தூத்துக்குடியின் மொத்த மக்கள் தொகை 6 லட்சம். ஆனால்ஸ்டெர்லைட் தொழிற்சாலை மீண்டும் துவங்க எதிர்ப்புதெரிவித்து மனு அளித்தவர்கள் 2500 பேர். இதிலிருந்துதெரிவது தொழிற்சாலை திறப்புக்கு எதிராக மனுஅளிப்பதை பெரும்பாலானவர்கள் தவிர்க்கிறார்கள்என்பதே. ஏனென்றால் தொழிற்சாலை திரும்பத்திறப்பதை எதிர்ப்பவர்கள் கண்டிப்பாக நேரில் வந்துஎதிர்த்திருப்பார்கள். ஆனால் அப்படி எதுவும்நடக்கவில்லை.

ஸ்ரெர்லைட் திறப்பு சம்பந்தமான தங்களின் ஆதரவுமனுவை அளித்த சில கிராமவாசிகளை கெட்டவார்த்தைகளால் திட்டியும், அடித்தும்துன்புறுத்தப்படுவதற்கான வீடியோக்கள் உள்ளன. இந்தவீடியோக்களிலிருந்து தொழிற்சாலை திறப்புக்கு ஆதரவுஅளிக்கவரும் கிராமத்து மக்கள் எப்படியெல்லாம்துன்புறுத்தப்படுகிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

G.ஹரி ராகவன் என்கிற வழக்கறிஞர் ஆதரவளிக்கும்கிராமத்து மக்களைத் தாக்கி, எவ்வாறு தொழிற்சாலையைஎதிர்ப்பவர்களுடன் இணைந்து செயல்படுகிறார்என்பதையும் வீடியோக்களில் காணலாம். ஏற்கனவே இந்தவழக்கறிஞருக்கு எதிராக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஜூலை மாதமே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.அதன் பின் இவரே ஜூலை 6 ஆம்தேதி மதுரையில் நீதிபதிமுன் சரணடைந்து பின் கைது செய்யப்பட்டார். ஜூலை 24ஆம் தேதி  ஹரி ராகவனுக்கு  அடுத்த 90 நாட்களுக்குஸ்டெர்லைட் சம்பந்தப்பட்ட எந்த போராட்டங்களிலும்கலந்து கொள்ளக் கூடாது என்கிற நிபந்தனையுடன் ஜாமீன்வழங்கப்பட்டது. ஆனால் இவர் அந்த நிபந்தனைகளுக்குகட்டுப்படாமல் ஸ்டெர்லைட் போராட்டங்களில் கலந்துகொண்டார். சட்டத்தை அவமதிப்பு செய்த இவரதுசெயலுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கண்டனம்தெரிவிக்குமா..?

இங்குள்ள வீடியோவின் மூலம் ஸ்டெர்லைட்தொழிற்சாலையை திரும்ப திறக்க வேண்டுமென்றஆதரவாளர்களின் குரல்கள் போராட்டக்காரர்களாலும்,உள் நோக்கமுள்ளவர்களாலும் அடக்கப்படுவது நன்றாகத்தெரிகிறது.

இப்படி மனு கொடுக்க வரும் கிராமத்து ஜனங்களைமுரட்டுத்தனமாக நடத்தும் முறையிலிருந்து ஒன்றைப்புரிந்து கொள்ளலாம். இவர்களின் மனதில் ஒரு பயத்தைஉருவாக்கி அதன்மூலம் ஸ்டெர்லைட் ஆலை திறக்கஆதரிப்பவர்களின் குரலை ஒடுக்கிவிடுவதேபோராளிகளின் ஒரே நோக்கம். அதோடு தங்கள் குரலைஉயர்த்தி, மக்களின் மேல் உள்ள தங்களின்சகிப்புத்தன்மையின்மையை வெளிப்படுத்துகிறார்கள்.ஆகவே மனுக்களின் அடிப்படையில் தொழிற்சாலையைதிரும்ப திறப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

போராளிகளின் பொய் பரப்புரையிலிருந்து நமக்கு ஒன்றுநன்றாகப் புலப்படுகிறது. தூத்துக்குடியிலிருக்கும்கிராமத்து மக்களை மனு அளிக்கவிடாமல் அவர்களின்மனதில் பயத்தை ஏற்படுத்திவிட்டனர் இந்த போராளிகள் .அதனால் அவர்கள் தங்கள் அபிப்பிராயத்தைவெளிப்படுத்தத் தயாராக இல்லை. இந்த கோணத்தில்பசுமைத் தீர்ப்பாயம் சிந்தித்து அமைதியாக இருப்பதுகிராமத்து ஜனங்கள் ஆலை திறப்பதை ஆதரிக்கிறார்கள்என்கிற கோணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Disclaimer: The views and opinions expressed in this article are those of the authors and do not necessarily reflect the official policy or position of SatyaVijayi. This article is a Tamil translation of the original article which can be read here.

Comments

comments