எதற்காக இந்திரா காந்தி அவசரநிலைப்பிரகடனத்தை இந்தியாவில் அறிவித்தார்..?

இதுவரை எந்த பெரிய கட்டுரையோ, அல்லது புத்தகமோ, எதற்காக நம் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவசரப்பிரகடன நிலையை 25 ஆம் தேதி ஜூன் மாதம் 1975 இல் அறிவித்தார் என்ற உண்மையான காரணத்தையோ யாரும் எழுதவே இல்லை. அது மட்டுமல்ல, விலாவாரியான ஷா கமிஷன் அறிக்கைகளை ஒட்டு மொத்த இந்திய மற்றும் அகில உலக நூலகங்களிலிருந்து சாமர்த்தியமாக துடைத்தெடுத்தனர். ஒரு சாதாரண இந்தியக் குடிமகனின் கைகளுக்கு இந்த அறிக்கைகள் சென்றடையாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.

இதற்கான விடையை ரோஹித்.B என்பவரின் எழுத்தின் மூலம் என்னென்ன காரணங்களினால், தொடர் நிகழ்வுகளினால் அவசரநிலைப் பிரகடனத்தை இந்திராகாந்தி கொண்டு வந்தார் என்பதை அறியலாம். மிகப் பெரிய காரணமாக அலஹாபாத் ஹை கோர்ட், தேர்தல் முறைகேடுகள் நடந்துள்ளதால் இந்திராகாந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவித்ததே..!

இதோ இன்னும் விரிவான பதில்..!

ஜூன் 25, 1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலைப் பிரகடனம் மேற்கொண்டு 21 மாதங்கள் தொடர்ந்தது. அந்த 21 மாதங்களும் சுதந்திர இந்தியாவின் இருண்ட பக்கங்கள் என்று விவரிக்கப்பட்டது.

இந்தியாவில் இதுவரை 3 முறை அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல்முறை 1962 ஆம் ஆண்டு, இந்திய – சீனா போரின் போதும், இரண்டாம்முறை 1971 இல் நடந்த இந்திய – பாகிஸ்தான் போரின் பொழுதும்.

எதற்காக இந்திராகாந்தி இந்தியாவில் அவசரநிலைப் பிரகடனத்தை அறிவித்தார்..?

தொடர் நிகழ்வுகள் :-

 1. 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போரினால் நாட்டின் GDP இல் ஒரு முடக்கம் ஏற்பட்டிருந்தது.
 2. வறட்சி, வேலையில்லாத் திண்டாட்டம், எண்ணை வளத்தால் ஏற்பட்ட நெருக்கடி இவைகளால் இந்திய பொருளாதாரத்தில் மேலும் தடுமாற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்களிடையேயும், தொழிலாளர்களிடையேயும் ஒரு கொந்தளிப்பு நிலை உருவானது.
 3. அப்போது ரயில்வே பேரவையின் தலைவராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் இந்தியா முழுவதிலும் ரயில்வே வேலைநிறுத்தத்தை நிகழ்த்தியதன் மூலம் பெரிய அளவில் கைதுகளும் அதைத் தொடந்து அமைதியின்மையும், கலகமும் ஏற்பட்டது.
 4. இந்திரா காந்தியின் ஊழலையும், எதேச்சாதிகாரத்தையும் எதிர்த்து, ஜெயப்ரகாஷ் நாராயணன் வெகுஜன போராட்டத்தை நடத்தினார்.
 5. அப்போதைய அரசாங்கம் நீதித்துறையை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்தது. 1975 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் நாளன்று இந்திரா காந்தி லோக்சபா தேர்தலில் ஜெயித்த வழக்கில், ஊழல் மற்றும் தேர்தல் முறைகேடுகளைக் காரணம் காட்டி அந்த வெற்றி செல்லாது என்று அலஹாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தனக்கு வந்த பேச்சு வார்த்தை அழைப்புகளை நிராகரித்துவிட்டு இது விஷயமாக உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்தார் இந்திரா அம்மையார்.
 6. அதோடு… இந்திராகாந்தி, இந்தியாவின் உள்நாட்டுக் குழப்பங்களுக்கு முக்கிய காரணம் மிக சாதுர்யமாகக் காய் நகர்த்தும் அமெரிக்க உளவு நிறுவனமாகிய CIA வே என்கிற முடிவுக்கு வந்தார். இதன் நடுவே ஜெயபிரகாஷ் நாராயணன் அம்மையார் ராஜினாமா செய்தாக வேண்டும் என்று சத்யாகிரஹம் செய்தார். ஒரு பேரணியையும் நடத்தினார்.

1975 ஆம் ஆண்டு, 25 ஜூன் மாதம் தன் கட்டுப்பாட்டிலிருந்து ஆட்சி நழுவிவிடுமோ என்று பயந்து இந்திராகாந்தி அவசரநிலைப் பிரகடனத்தை அறிவித்தார். இந்த அவசரநிலை அடுத்த 21 மாதங்கள் தோடர்ந்து மார்ச் மாதம், 21 ஆம் தேதி 1977 ஒரு முடிவுக்கு வந்தது.

அவசரநிலையை சட்டப்பூர்வமாக அறிவித்தது அப்போதைய ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமத். அதற்கு சொல்லப்பட்ட காரணம் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து மற்றும் மோசமான பொருளாதார நிலைமை..!

அந்த நேரத்தில் நடந்தவைகள் என்ன என்ன..?

 • தொடர் கைதுகள்: அடிப்படை உரிமைகள் தடைசெய்யப்பட்டன. யாரெல்லாம் அரசாங்கத்தை எதிர்த்தார்களோ அவர்கள் மேற்கொண்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு தகுதி இழந்தவர்கள் என்று கூறி காவலில் வைக்கப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர். ஆர்டிகிள் 352 இன்படி இந்திய ஜனநாயகம் வழங்கிய அசாதாரண அதிகாரங்களை, உரிமைகளை இந்திராகாந்தி அம்மையார் தவறாகப் பயன்படுத்திக்கொண்டார்.
 • ஜெயபிரகாஷ் நாராயணன், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், மொரார்ஜி தேசாய், நாநாஜி தேஷ்முக், சுப்ரமணிய ஸ்வாமி, AB வாஜ்பாய், LK அத்வானி, ராமகிருஷ்ண ஹெக்டே, HD தேவகௌடா, M கருணாநிதி, JB பட்னாயக், ஜோதி பாஸு, மது தண்டவதே, லாலு ப்ரஸாத் யாதவ், ஷரத் பவார், முலாயம் சிங் யாதவ் மற்றும் பலர் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு இந்திரா அம்மையாரின் அவசரநிலை பிரகடனத்தை எதிர்த்தார்கள்.
 • ஊடகங்களுக்குத் தணிக்கை: வெளிநாட்டு பத்திரிகை நிபுணர்கள் துரத்தப்பட்டனர். தேசிய மற்றும் உள்ளூர் ஊடகங்களுக்கு கடுமையான தணிக்கை திணிக்கப்பட்டது.
 • உள்துறை அமைச்சகம் 7000 க்கும் மேற்பட்ட மக்களை தங்களுக்குள் ரகசிய ஆவணங்களை பறிமாறிக் கொண்டனர் என்று கூறி அதற்காக கைது செய்ததாக மே 1976 இல் பாராளுமன்றத்தில் ஒப்புக் கொண்டது. (Source: Indian Express).
 • கருத்தடை: சஞ்சய்காந்தியின் செல்வாக்கு – (இந்திராகாந்தியின் இரண்டாம் மகன்) குடும்பக் கட்டுப்பாடு என்னும் போர்வையில் அரசியலமைப்புக்கு விரோதமான அதிகாரம் மற்றும் கைதேர்ந்த கட்டாயப்படுத்தப்பட்ட கருத்தடை நிறைவேற்றப்பட்டது.
 • மாநிலங்களில் நடந்த அட்டூழியங்கள்: இந்திய அரசாங்கம் ஒரு கமிஷனை நிறுவி (ஷா கமிஷன்) அதன் மூலம் 1975 – 77 வரை அரசில் அவசரநிலை பிரகடனம் அறிவித்திருந்த காலத்தில் நடந்த அசாதாரண நிகழ்வுகளை விசாரிப்பதற்கு ஏற்பாடு செய்தது. அதன்படி அரசு, மொத்தமாக 1,10,806 நபர்களை நாடு முழுவதும் MISA மற்றும் இந்திய ராணுவத்தின் மூலம் கைது செய்து வைத்திருந்தது.
 • டர்க்மேன் கேட் அழிப்பு மற்றும் எரிப்பு: 1976 இல் அரசாங்க ஆர்டரின்படி வீடுகளை அழித்ததற்காக எதிர்ப்பு தெரிவித்தவர்களை சுட்டுத் தள்ளினர் போலீஸ். ஆனால் இந்த செயலை சேரிகள் இல்லாமல் டெல்லியை சுத்தப்படுத்துகிறோம் என்கிற பெயரில் நியாயப்படுத்தினர்.

M.A ரானே (மும்பை ஹை கோர்டின் முன்னணி வக்கீல்) கூறியது..உச்சநீதி மன்றம் ஒட்டு மொத்த நாட்டு மக்களும் சிறையில் இருந்த போது அவர்களுக்குத் தேவையான முக்கியத்துவத்தை வழங்கவில்லை என்றார். ஷா கமிஷனின் குறிப்புப்படி, அந்த காலகட்டத்தில் எல்லா ஐஏஎஸ் அதிகாரிகளும் சட்டத்திற்குப் புறம்பாக அரசியல் காரணங்களுக்காக தங்களுக்குக் கொடுக்கப்பட்ட உத்தரவுகளைக் கூட நிறைவேற்றினர்..!

Disclaimer: The views and opinions expressed in this article are those of the authors and do not necessarily reflect the official policy or position of SatyaVijayi. This article is a Tamil translation of the original Quora answer which can be read here.

Comments

comments